பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்து அறிவிப்பு !

ஒரு பெண் குழந்தையுடன் தாய், தந்தை கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டால் குழந்தை பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை ரசீது வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-16 09:54 GMT

ஆட்சியர் பூங்கொடி 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஒரு பெண் குழந்தையுடன் தாய், தந்தை கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டால் குழந்தை பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை ரசீது வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News