கள் உணவு பொருளாக அறிவிக்கப்படும் - நாதக வேட்பாளர் வாக்குறுதி

சீமை சாராயத்திற்கு முழு தடை விதிக்கப்பட்டு, பனம் பால் (கள்) உணவு பொருளாக அறிவிக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன் கூறினார்..

Update: 2024-04-07 11:45 GMT

வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன் விளாத்திகுளம் பகுதிகளில் கட்சியினர்களுடன் சேர்ந்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள பனை தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு சென்று அங்கிருந்த பனைத் தொழிலாளர்களிடம், உங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் சீமை சாராயத்திற்கு முழு தடை, பனம் பால் (கள்) மற்றும் தென்னம்பால் (கள்) உள்ளிட்டவற்றை உணவு பொருளாக அறிவிக்கப்படும் என்பதை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குளத்தூர், பனையூர், வேப்பலோடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பரப்புரையில் ஈடுபட்டார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாண்டி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ரமேசுகுமார், மண்டல மகளிரணி செயலாளர் அன்னலட்சுமி, வடக்கு மாவட்ட தலைவர் செயபாசு, செய்தி தொடர்பாளர் பாலாஜி, மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News