ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் போட்டி

பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

Update: 2024-03-22 02:24 GMT

ஓ.பன்னீர்செல்வம்

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளராக ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.  இவர் தேனி மாவட்டம், பெரியகுளம் எனும் ஊரில் ஓட்டக்கார தேவர் மற்றும் பழனியம்மாள் நாச்சியார் ஆகியோருக்கு ஜனவரி 14, 1951 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் பெரியகுளத்தில் உள்ள விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் இறுதிவகுப்பில் தேறினார். பின்னர் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் படித்து இளங்கலை (பி. ஏ) பட்டம் பெற்றார். இவருக்கு விஜயலட்சுமி என்னும் மனைவியும், இரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும்[2] ஒரு மகளும் உள்ளனர். இவருக்கு ராஜா என்ற தம்பியும் உள்ளார்.

இவரது மூத்த மகன் இரவீந்திரநாத் குமார், 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்காவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, பணியாற்றி வருகிறார். தேர்தல் 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வருவாய்த்துறை அமைச்சர் (மே 19, 2001 – செப்டம்பர் 21, 2001) தமிழக முதல்வர் (செப்டம்பர் 21, 2001 – மார்ச் 1, 2002) பொதுப்பணித்துறை அமைச்சர் (மார்ச் 2, 2002 – 13 மே 2006) போன்ற பொறுப்புகளைப் பெற்றுப் பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டு தேர்தல் 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 19 மே 2006 முதல் 28 மே 2006 வரை தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும், 29 மே 2006 முதல் 14 மே 2011 வரை தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராாகவும் பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டு தேர்தல் 2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2011 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சர் (செப்டம்பர் 27, 2014 – மே 22, 2015) நிதி அமைச்சர் (மே 23, 2015 – மே 22, 2016) 2016 ஆம் ஆண்டு தேர்தல் 2016 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2016 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார். தமிழக முதலமைச்சர் (டிசம்பர் 6, 2016 – பிப்ரவரி 14, 2017). தமிழக துணை முதலமைச்சர் (ஆகஸ்ட் 21, 2017 – மே 6, 2021). 2021 சட்டமன்றத் தேர்தல் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகி,தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரனார் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News