பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கருவேல மரங்கள்: வாகன ஓட்டிகள் அவதி

மதுரை - பரமக்குடி நான்கு வழி சாலையில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துளளனர்

Update: 2024-06-13 09:22 GMT

சாலையோரத்தில் உள்ள கருவேல மரங்கள்

மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையை ஒட்டி கருவேல மரங்கள்வளர்ந்து ரோட்டை மறைப்பதால் வாகன ஓட்டிகள் தவிப்பிற்குள்ளாகின்றனர்.

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு கடந்த 2018 முதல் வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. தினசரி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பாதையை கடந்து வருகின்றன. சாலையை ஒட்டி உள்ள காலி இடங்களில் கருவேல மரங்கள்வளர்ந்து ரோட்டை மறைத்து வருகின்றன.

நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் பலமுறை வலியுறுத்தியும் இன்று வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான்கு வழிச்சாலையில் பல இடங்களில் சர்வீஸ் ரோடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. மணலூரில் மட்டும் சர்வீஸ் ரோடு பணிகள் இன்று வரை முழுமை பெறவில்லை.

இதனால் சர்வீஸ் ரோட்டில் எந்த வாகனங்களையும் நிறுத்த முடியாமல் நான்கு வழிச்சாலையிலேயே நிறுத்துகின்றனர். வாகனங்கள் நிற்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்கு வழிச்சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News