கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு

திருப்பூர் மணியகாரபாளையத்தில் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-01-30 06:56 GMT

மனு அளிக்க வந்த மக்கள் 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் ஊர் பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில், காஞ்சிநகர், அண்ணா நகர், விஜிவி கார்டன் ஆகிய குடியிருப்பு பகுதி அருகில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்பொழுது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளது, இதற்கு முன்பு மாநகராட்சி மேயரிடம் நாங்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் தற்போது பணிகள் துவங்கப்பட்டுள்ளது அரசு அதிகாரிகள் அவசரகதியில் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வருவதால் பல்வேறு பாதிப்புகள் அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகளுக்கு ஏற்படும், எனவே உடனடியாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகளை நிறுத்தி வேறு ஒரு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News