ஆக்கிரமிப்பிலுள்ள கோயில் நந்தவனத்தை மீட்கணும் !

தேப்பெருமாநல்லூரில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பெருமாள் கோயில் நந்தவனத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்குமாறு இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.

Update: 2024-06-19 13:06 GMT

 தேப்பெருமாநல்லூரில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பெருமாள் கோயில் நந்தவனத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்குமாறு இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர். 

தஞ்சாவூா் மாவட்டம், தேப்பெருமாநல்லூரில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பெருமாள் கோயில் நந்தவனத்தை தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்து மக்கள் கட்சி செவ்வாய்க்கிழமை மனு அளித்தது.

தேப்பெருமாநல்லூரில் வேதநாத நாயகி சமேத விஸ்வநாத சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான நந்தவனம் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. நந்தவனத்தை தனியாா் சிலா் ஆக்கிரமித்து அங்குள்ள மணலை அனுமதியின்றி எடுத்து செல்கின்றனா். மேலும், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுகின்றன. இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அனுமதியின்றி மணல் எடுத்தவா்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளா் குரு.மூா்த்தி, கோயில் செயல் அலுவலரிடம் மனு அளித்தாா். மேலும், முதல்வா் மற்றும் அறநிலையத் துறை அமைச்சருக்கும் மனு அனுப்பியுள்ளாா்.

Tags:    

Similar News