அரசு இடத்தை ஆக்கிரமிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

உலகங்காத்தானில் அரசு இடத்தில் தனி நபர் வேலி அமைக்க முயன்றதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-03 06:11 GMT


உலகங்காத்தானில் அரசு இடத்தில் தனி நபர் வேலி அமைக்க முயன்றதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


உலகங்காத்தானில் அரசு இடத்தில் தனி நபர் வேலி அமைக்க முயன்றதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் மில்கேட் பகுதியில் புறவழிச்சாலையை ஒட்டியவாறு அரசுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. 5 சென்ட் பரப்பளவு கொண்ட இடத்தில் ரேஷன்கடை மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்ட ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

இந்நிலையில், அங்குள்ள வீட்டு மனைகளுக்கு காலி இடம் வழியாகத்தான் செல்ல வேண்டும் என தனிநபர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே பிரச்னை இருந்து வரும் நிலையில், அந்த நபர் காலி இடத்தைச் சுற்றி வேலி அமைக்க குழி தோண்டும் பணி நேற்று ஈடுபட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகங்காத்தான் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி - சேலம் புறவழிச்சாலையில் மதியம் 12:15 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராஜாராமன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து, 12:30 மணியளவில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News