பட்டுக்கோட்டையில் அக்.28ஆம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
பட்டுக்கோட்டையில் அக்.28ஆம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரி, இணைந்து நடத்தும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா அக்.28 அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்களான மருத்துவமனைகள், உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகிய வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமிற்கு வருகைதரும் வேலைநாடுநர்கள் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள 10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, தொழிற்கல்வி, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை (நகல்), போதுமான எண்ணிக்கையில் சுயவிபர குறிப்பு நகல்கள் (பயோடேடா) புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளவும். இம்முகாமில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு விபரம் அறிந்து கொள்ளவும், பதிவு செய்துகொள்ளவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் அரங்கு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.
வேலைநாடும் இளைஞர்கள் தங்களது தொழில்திறனை வளர்த்துக் கொள்ள, திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் அரங்குகளில் இலவச திறன் எய்தும் பயிற்சிக்கு பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இம்முகாமில் தமிழகத்தின் 100-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 10,000-க்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர். எனவே வேலைநாடும் இளைஞர்கள் நம்பிக்கையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.