தரைப்பாலம் பணி தரம் குறித்து அதிகாரிகள் சோதனை

பினாயூரில் அரசு சார்பில் 2.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் பணி தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-05-12 07:22 GMT

பினாயூரில் அரசு சார்பில் 2.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் பணி தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டின்கீழ், 400 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு, பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் இருந்து தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய் உள்ளது. இந்த நீர்வரத்து கால்வாய் இணைப்பாக, பினாயூர் சாலையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. மேலும், பாலத்தின் தரைத்தளம் கால்வாய் உயரத்தைக் காட்டிலும் மேடாக இருந்தது. இதனால், மழைக் காலத்தில் பாலாற்றில் இருந்து ஏரிக்கு செல்லும் தண்ணீர், தரைப்பாலம் பகுதியில் தடைபட்டு தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சேதமடைந்த தரைப்பாலத்தை இடித்து கால்வாய் அளவிற்கு சமமாக அமைப்பதோடு, பாலத்தை உயரமாக அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, நபார்டு திட்ட நிதியின் கீழ், 2.63 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியின் தரம் குறித்து மாநில தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஒன்றிய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News