திருக்கல்யாண விருந்தை ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விருந்தை ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-21 17:18 GMT
அதிகாரிகள் ஆய்வு
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தையொட்டி தனியார் ஆன்மீக அமைப்பூ ஏற்பாடு செய்த திருக்கல்யாண விருந்து உணவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒ
வ்வொரு ஆண்டும்திருக்கல்யாண வைபவத்தின் போது பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் சேதுபதி மேல்நிலை பள்ளியில் திருக்கல்யாண விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை டிரஸ்ட் சார்பில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோருக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்து.
இந்நிலையில் சுத்தமாகவும் தூய்மையாகவும் உணவுகள் வழங்கப்படுகிறதா என்பதை மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.