சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு
சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி சம்பவ இடத்தில் உயிரிழப்பு,ஓட்டுநர் கைது போலீசார் விசாரணை;
Update: 2024-01-03 11:07 GMT
தேத்துரு மேரி (70)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல அகணி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி தாஸ் மனைவி தேத்துரு மேரி ( 70).இவர் சீர்காழி பிடாரி வடக்கு வீதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பழக்கடைக்கு வந்த மினி லாரி மூதாட்டி தேத்துரு மேரி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சீர்காழி அண்ணா தெருவில் வசிக்கும் மேரி மகள் சோபியா மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுதது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.தகவல் அறிந்த சீர்காழி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் திண்டுக்கல்லை சேர்ந்த பெனட் ராஜாவை கைது செய்தனர்.