திருவாரூர் அருகே மன உளைச்சல் காரணமாக பூச்சி மருந்து குடித்து தற்கொலை
தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-10 09:10 GMT
மன உளைச்சலால் விவசாயி தற்கொலை
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் ஊராட்சி தெற்கு சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் வயது 58. இவர் தொடர்ந்து மது அருந்துதல் காரணமாக உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .இதனால் மன உளைச்சல் அடைந்த சண்முகம் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் அவரது மகன் மணிவேலன் அளித்த புகாரின் பேரில் அவரது உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் . இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.