மதுப்பழக்கத்தால் உடல் நலம் குன்றி உயிரிழப்பு

கரூர் மாவட்டம், தென்னிலை பகுதியில் மதுப்பழக்கத்தால் முதியவர் உடல் நலம் குன்றி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-25 01:42 GMT

கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, தென்னிலை லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் வயது 55. சுந்தரத்திற்கு மது பழக்கம் இருந்து வந்தது. அதிக அளவில் மதுவை குடித்து வந்ததால் கடந்த 10 நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார். இந்நிலையில் மே 23ஆம் தேதி காலை 9 மணி அளவில், தென்னிலையில் அவர் வசித்து வந்த வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தென்னிலை தெற்கு கிராம நிர்வாக அலுவலர் சுரேஷுக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று சுந்தரம் உயிரிழந்ததை உறுதி செய்தார். பின்னர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சுந்தரத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல்துறையினர்.

Tags:    

Similar News