புளிய மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு !
அண்ணாமலை அள்ளி - பாலக்கோடு சாலையில்,கொண்டசமான அள்ளி பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் உயிரிழந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-11 09:03 GMT
வழக்குப்பதிவு
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஆ.மல்லாபுரம் திண்டன் தெருவைச் சேர்ந்த முதியவர் சுந்தரம் மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று இரவு, பாலக்கோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை அள்ளி - பாலக்கோடு சாலையில்,கொண்டசமான அள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த பகுதியில் இருந்த புளியமரத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் தவறி விழுந்து படுகாயமடைந்த அவரை அங்கிருந்த வர்கள் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் கிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, சுந்தரம் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.