கட்டிலில் இருந்து தவறி விழுந்த முதியவா் பலி
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-13 05:58 GMT
கட்டிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி புறவழிச்சாலை கிழக்கு பகுதியைச் சோ்ந்தவா் தங்கம் மகன் சங்கரன் (68). இவா் வலிப்பு நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள அறையில் படுக்க சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து அவரது மகன் சரவணன் சென்று பாா்த்தபோது சங்கரன் வலிப்பு ஏற்பட்டு கட்டிலிலிருந்து தவறி விழுந்து கிடந்துள்ளார்.
அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவா், அவா் இறந்து விட்டதாக கூறினாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.