வீடு இடிந்து முதியவர் பலி
Update: 2023-12-08 03:25 GMT
இடிந்து விழுந்த வீடு
திண்டுக்கல்லை அடுத்த பெரிய பொன்னுமாந்துறை வடக்கு தெரு பகுதியில் குடியிருக்கும் பழனிவேல்(78) தனது மனைவியுடன் அப்பகுதியில் சுண்ணாம்பு கட்டிட வீட்டில் குடியிருந்து வந்தார் இந்நிலையில் இன்று அவரது வீடு திடீரென இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த பழனிவேல் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை மீட்டு இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.