பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் பசியில் சுருண்டு கிடக்கும் முதியவர்கள்

பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் பசியில் சுருண்டு கிடக்கும் முதியவர்களிக்கு ஆதரவளிக்க வலியுறுத்தபட்டுள்ளது.

Update: 2024-05-03 17:08 GMT

சுருண்டு கிடக்கும் மூதாட்டி

பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் வெயிலின் தாக்கத்தினால் 10க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் உணவு கிடைக்காமல், பசியில் சுருண்டு படுத்து கிடக்கின்றனர். அவர்களை மீட்டு, உணவளித்து முறையாக பராமரிக்க சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற அருள்மிகு பவானியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது இப்பகுதிகளில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது.

இதனால் பலர் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இங்குள்ள பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் கோடை வெயிலின் தாக்கத்தில், கடந்த ஒரு மாத காலமாக போதிய உணவு கிடைக்க வழியின்றி, 10க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் பசியில் சுருண்டு படுத்துக் கிடக்கின்றனர். இதே நிலை நீடித்தால், அவர்கள் இறந்துவிடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் உணவு கிடைக்காமல் பசியோடு சுருண்டு கிடக்கும் ஆதரவற்ற முதியவர்களை மீட்டு, அவர்களுக்கு போதிய உணவு மற்றும் தங்குமிடம் அளித்து, முறையாக பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News