தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
சத்யா நகரில் தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு;
By : King 24x7 Website
Update: 2023-12-03 15:24 GMT
சத்யா நகரில் தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
மேட்டுப்பாளையம் சத்யாநகரில் சமையல் வேலை செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். மல்லசமுத்திரம் அருகே உள்ள, மேட்டுப்பாளையம் சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கன் மனைவி குப்பாயி84. நேற்று முன்தினம் அவரது வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்யும்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பற்றி உள்ளது. மலமலவென பரவியத் தீ உடல் முழுவதும் பரவியுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது பேத்தி மஞ்சு அளித்த புகாரின்பேரில், மல்லசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.