குடிபோதையில் கார்ஓட்டிய விபத்தில் பெண் பலி

மயிலாடுதுறை அருகே மது போதையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய விபத்தில் பெண் பலியானார்.;

Update: 2024-06-24 12:02 GMT

விபத்தில் பெண் மரணம்

மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில் தோட்டம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பழனிவேல் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்றுள்ளார். அப்போது மது போதையில் வழி நெடுகிலும் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார்.

மன்னம்பந்தல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த பெண்களின் மீது மோதியதில் வயதான பெண்மணி ஒருவருக்கு தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸில் காயமடைந்த வயதான பெண்மணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விபத்தை ஏற்படுத்திய பழனிவேலை சுற்றி வளைத்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடமிருந்து மது போதையில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பழனிவேலை மீட்டு அழைத்துச் சென்றனர். மேலும் விசாரணையில் உயிரிழந்த பெண்மனி அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி லட்சுமி (50) என்பதும் , அருகே உள்ள தெருவில் தெரிந்தவர் வீட்டுக்கு தனது மருமகள் செல்வியுடன் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு சாலை ஓரமாக நடந்து வந்தவர் மீது மது போதையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வாகனத்தை ஏற்றி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளி பழனிவேலை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News