ஓமலூர்: ரூ. 20 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திண்ணமங்கலம் ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-01-28 01:48 GMT
ஓமலூர் அருகே உள்ள திண்ணமங்கலம் ஊராட்சியில் சுமார் 20லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை விழா அதிமுக ஓமலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரம், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினருமான மணி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் விக்னேஷ், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம், சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தர்மன், புளியம்பட்டி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News