ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்தநாள் விழா
ஓமந்தூரார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவரது திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல் முதல்வராக பொறுப்பேற்று மறைந்த உத்தமர் என்று அழைக்கப்படும் ஓமந்துார் ராமசாமி ரெட்டியாரின் 129-ம் பிறந்த நாள் விழாவவை முன்னிட்டு பிறந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள திரு உருவ சிலைக்கு தமிழக அரசு தரப்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மஸ்தான் கூறியதாவது, உத்தமர் ஓமந்துாராரின் கொள்கைகளை பின்பற்றி தற்போதைய தமிழக அரசு நடந்து வருகிறது. சி.ஏ.ஏ சட்டத்தை அப்போது ஆட்சி செய்த அதிமுக ஆதரித்தது, இப்போது அந்த சட்டத்தினால் ஏற்படப்போகும் நிலையை உணர்ந்து எதிர்த்து வருகிறது. இது வரவேற்கத்தக்கதாகும், மேலும் இந்த சட்டத்தை அப்போது ஆதரித்த காரணத்தினால் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.