ஆம்னி பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் படுகாயம் !

கயத்தாறு அருகே ஆம்னிபஸ்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2024-07-05 04:40 GMT

விபத்து



accident

















பாளையங்கோட்டை நண்பன் தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் முருகவேல்(வயது40). பாப்பாகுடி புதுக்கிராமத்தை சேர்ந்த ஆதிமுலம்(35). இருவரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் அலுவலக பணியாக நெல்லையில் இருந்து மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை முருகவேல் ஓட்டினார்.

இதற்கிடையே கயத்தாறு அருகே சிறிது தொலைவில் சுற்றுலா வேன் ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், அந்த பகுதியில் ஒருவழிப்பாதையில் வாகனங்கள் ெசன்று கொண்டிருந்தன. அந்த வழியில் சென்றபோது காரும், எதிரே பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் முருகவேல், ஆதிமூலம் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பாளை., ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News