பிப்ரவரி 24-ல் அரளிப்பாறை மஞ்சுவிரட்டு துவக்கம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை மஞ்சுவிரட்டு பிப்.24ல் நடக்கிறது.

Update: 2024-02-20 08:54 GMT


சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை மஞ்சுவிரட்டு பிப்.24ல் நடக்கிறது.


சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை மஞ்சுவிரட்டு பிப்.24ல் நடக்கிறது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் வசிக்கும் ஐந்து நிலை நாட்டார்கள் சார்பில் பல ஆண்டுகளாக அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. முல்லைமங்கலம், சதுர்வேத மங்கலம், கண்ணமங்கலம், சீர்சேந்தமங்கலம், வேழமங்கலம் என 5 எல்லை மங்கலப் பகுதிகளில் வாழும் இம்மக்கள் தமிழர்களின் வீரம், கலாசாரத்தை பறைசாற்றும் விதமாகவும், தங்களை ஆண்டுக்கொருமுறை சந்தித்து பரஸ்பரம் உறவு பாராட்டிக் கொள்ளும் விதமாகவும் இம்மஞ்சுவிரட்டை நடத்தி வருகின்றனர்.

மஞ்சுவிரட்டை பாறையில் அமர்ந்து பாதுகாப்பாக பார்க்கலாம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள், குழந்தைகள் மஞ்சுவிரட்டிற்கு அதிக அளவில் வருவர். அரளிப்பாறை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழு முன்பாக அரசின் வழிகாட்டுதல்படி வாடிவாசல் அமைக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மஞ்சுவிரட்டை நடத்த விழா கமிட்டியினரும் வருவாய் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளும் இணைந்து ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

Tags:    

Similar News