கொல்லங்கோடு அருகே வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல் ஒருவர் கைது
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே செங்குருட்டி பகுதியை சேர்ந்தவர் நிர்மலன். இவரது வீடு மற்றும் நிலத்தை ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்து கடன் பெற்றிகுந்தார். அந்தக் கடனை முறையாக செலுத்தாத காரணத்தால் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் நிலத்தையும் வீட்டையும் ஏலம் விட்டது. அதே பகுதியை சேர்ந்த ஷாம் என்பவர் 1 கோடி 7 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இந்த நிலம் மற்றும் வீட்டை நீதிமன்ற உத்தரவுபடி வங்கி நிர்வாகம் கையகப்படுத்தி, ஏலம் எடுத்த நபரிடம் கொடுக்க, வங்கியின் திருவனந்தபுரம் பிராந்திய மேலாளர் சுப்பிரமணியன் தலைமையில அதிகாரிகள் நேற்று வந்திருந்தனர்.
அப்போது கேட் பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைக்கும் முயற்சி ஈடுபட்டபோது, தகவல் அந்த சம்பவ இடம் வந்த நிர்மலன் மற்றும் சிலர் சேர்ந்து அதிகாரிகள் மற்றும் பாதுகாவலரை தாக்கினர். இதில் மூன்று ஊழியர்கள் காயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பாதுகாவலர் மது என்பவருக்கு கையில் முடிவு ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமான புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து சுனி (51) என்றவரை கைது செய்தனர்.