களக்காட்டில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

களக்காடு பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மீது குண்டாஸ் பாய்ந்தது.

Update: 2024-01-21 16:14 GMT

காவல் நிலையம்

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டியை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் வானுபாண்டி என்ற வான்பாண்டி,கண்ணன் என்ற காடுவெட்டி கண்ணன் ஆகிய இருவரும் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் உள்ளனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய பேச்சிமுத்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் எஸ்பி பரிந்துரையில் கலெக்டர் உத்தரவின் படி குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News