பைக்கில் இருந்து கீழே விழுந்து ஒருவர் படுகாயம்
காவல் நிலையம்
கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணவாடி அருகே உள்ள மருதம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் நவம்பர் 7ஆம் தேதி இரவு 10 மணியளவில் பாளையத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் அவருக்கு சொந்தமான டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் தூளியப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, வேகமாக டூவீலரை ஓட்டியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மதியழகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த மதியழகன் மனைவி பிரியா என்பவர், இது குறித்து வெள்ளியணை காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக நவம்பர் 8ஆம் தேதி டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான மதியழகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.