கரூரில் ஒரு கிலோ உப்பு 53 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் -ருசீகர நிகழ்வு.

கரூரில் நடந்த நகரத்தார் பிள்ளையார் நோன்பு விழாவில் ஒரு கிலோ உப்பு, 53 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ருசீகர நிகழ்வு நடைபெற்றது.;

Update: 2023-12-19 07:25 GMT

பிள்ளையார் நோன்பு விழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் வாழ் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும், கார்த்திகை மார்கழி மாதம் சஷ்டி திதியும், சதய நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில் பிள்ளையார் நோன்பு கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் விநாயகரை வணங்கி வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சி, இந்த அமைப்பின் தலைவர் அக்ரி சுப.செந்தில்நாதன் தலைமையில், பொருளாளர் கும.குமரப்பன் முன்னிலையில் நடைபெற்றது. செயலாளர் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார். இளமாவு தீபம் எடுத்து, நோன்பு களைந்து பின் கூடியிருந்த 300- பேருக்கு இளமாவு தீபம் எடுத்துக் கொடுக்க அனைவரும் அன்புடன் வாங்கி விழுங்கி நோன்பு களைந்தனர். தொடர்ந்து வழிபாட்டிற்காக பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்ட உப்பு, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு, சட்டை, ஸ்கூல் பேக், மணமாலை, குபேரன், விளக்கு, பிள்ளையார் உள்ளிட்ட 25- பொருட்களை சமூக அறங்களுக்கான நிதித் திரட்டலுக்காக மேலை பழநியப்பன் ஏலம் நடத்தினார். இதில் ருசிகரமாக, உப்பு ஒரு கிலோ 53,000 ரூபாய்க்கும், மாலை 24ஆயிரம் ரூபாய்க்கும், கற்கண்டு 1 கிலோ 4,101- ரூபாய்க்கும், திருவிளக்கு 12ஆயிரம் ரூபாய் என மொத்தம் சுமார் மூன்று லட்சத்து ஒரு ஆயிரதிற்கு ஏலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News