ஒரு மாத குழந்தை தண்ணீர் மூழ்கடித்து கொலை: காதல் தம்பதி கொடூரம்

கரையப்பட்டியை சேர்ந்த மோகன் விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்த நிலையில், சாட்சி கூடாது என்பதற்காக, தன் ஒரு மாத குழந்தையை நீரில் மூழ்கடித்து கொன்றார்.

Update: 2024-01-16 06:52 GMT
 திருமயம் தாலுக்கா கரையப்பட்டியை சேர்ந்தவர் மோகன் வயது 34 விவசாயி. இவரது மனைவி கிருத்திகா வயது 26 இருவரும் காதலித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். டிசம்பர் மாதம் கிருத்திகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி மாலை குழந்தை மயங்கி கிடந்ததாக கூறி அருகில் உள்ள டாக்டரிடம் மோகன் தூக்கி சென்றார். குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இது பற்றி கே. புதுப்பட்டி போலீசில் மோகன் புகார் செய்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் திடிக்கிடும் தகவல் வெளியானது. மோகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவி விவாகரத்து கேட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கிருத்திகாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். விவகாரத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் முதல் மனைவி சம்மதமின்றி கிருத்திகாவை கரம் பிடித்தது குற்றம் என்பதுடன் குழந்தை இருந்தால் அது இரண்டாவது திருமணம் நடந்ததற்கு சாட்சியாக அமைந்துவிடும் என்பதால் ஒரு மாத குழந்தையை மோகனும், கிருத்திகாவும் சேர்ந்து மொட்டை மாடியில் இருந்த குடிநீர் தொட்டி நீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தன. இந்த வழக்கில் நான்கு நாட்களில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்த கே புதுப்பட்டி போலீசாரை எஸ்பி வந்திதா பாண்டே ,டிஎஸ்பி அப்துல் ரகிமான் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News