மணல் கடத்தல் விவகாரத்தில் இருவரில் ஒருவர் கைது !
மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் கைது. ஒருவர் தலைமறைவு. இரண்டு லாரிகள் பறிமுதல்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் கைது. ஒருவர் தலைமறைவு. இரண்டு லாரிகள் பறிமுதல். கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், லாரியில் மணல் கடத்துவதாக காதப்பாறை கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மார்ச் 29ஆம் தேதி அதிகாலை 5:30 மணி அளவில், வெங்கமேடு காவல் எல்லைக்குட்பட்ட, தண்ணீர் பந்தல் பாளையத்திலிருந்து வெண்ணைமலை சேரன் பள்ளிக்கு செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
காதப்பாரை கிராம நிர்வாக அலுவலர் பிரவீன் குமார் அப்போது, ஈரோடு மாவட்டம், பவானி, ஆலந்தூர், அப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் வயது 26 என்பவர் டிப்பர் லாரியில் அமராவதி ஆற்றில் இருந்து மணலை களவாடி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த லாரியை தடுத்து நிறுத்தி, ஓட்டுனர் சிவசங்கரை கைது செய்தனர. மேலும் லாரியையும், லாரியில் இருந்த நான்கு யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, டி.என். 30 பிசி 8870 என்ற எண் கொண்ட டாரஸ் லாரி வந்ததை கிராம நிர்வாக அலுவலர் தடுத்து நிறுத்தியதால், டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். எனவே அந்த லாரியையும், லாரியில் கடத்தி வந்த ஆறு யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக விஏஓ பிரவீன்குமார் வெங்கமேடு காவல் நிலையத்திற்கு அளித்த புகார் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பிடிபட்ட லாரி டிரைவர் சிவசங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய மற்றொரு லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.