விவசாயி மீது தாக்குதல் - ஒருவர் கைது!
ஆரணி அருகே விவசாயியை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-30 13:56 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மட்டதாரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 52), விவசாயி. இவருக்கும் அவரது தம்பி ஐயப்பனுக்கும் தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்த நிலையில் ஐயப்பன், பெருமாளை தாக்கியுள்ளார். இதுகுறித்து ஆரணி காவல் நிலையத்தில் பெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தார்.