பனை மரத்தில் கார் மோதிக் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி....
பனை மரத்தில் கார் மோதி கவிழ்ந்து ஒருவர் பலி - போலீசார் விசாரணை;
விபத்து
திருவாரூர் அருகே தண்டலை கிராமத்தில் ஈரோடு மாவட்டம் முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் வயது 54 இவர் தனது குடும்பத்தினருடன் காரில் வேளாங்கண்ணி நோக்கி சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென சென்றுள்ளார்.
அவர் மீது மோதாமல் இருக்க சாலை மறுபக்கம் சென்றபோது எதிரே லாரி வந்துள்ளது இதில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் சாலையில் ஓரம் இறக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தின் மோதி கார் கவிழ்ந்தது.
இதில் சந்திரசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மாரிமுத்து என்பவருக்கு எலும்பு முறிந்தது. இதனை தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.