யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஹனீபா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;

Update: 2024-03-20 13:10 GMT
  • whatsapp icon

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா, தேவகிரி எஸ்டேட் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ஹனிபா 55 . ஹனீபா அருகிலுள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற போது, காட்டு யானை ஹனிபாவை தாக்கியுள்ளது. இதில் ஹனிபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விறகு சேகரிக்க சென்ற ஹனீபா வெகு நேரம் ஆகியும் கடைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி பார்த்து உள்ளனர்.

அப்போது தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஹனீபா சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து ஹனிபாவின் சடலத்தை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். யானை தாக்குதல் குறித்து வனத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News