சாலை விபத்தில் ஒருவர் பலி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் 61 வயதான சுப்பிரமணி் இவருடைய மனைவி 59 வயதான தனபாக்கியம். இவர்கள் இருவரும் தனது மோட்டார் பைக்கில் அன்பில் திண்ணியம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதேபோல் லால்குடி அருகே பூவாளூர் ராஜா தெருவை சேர்ந்த 42 வயதான சிட்டிபாபு சரக்கு வாகனத்தை ஓட்டிக்கொண்டு எதிரே வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கீழன்பில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் பைக் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த கணவர் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிரந்தார்.
அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த தனபாக்கியத்தை மீட்டு சிகிச்சைக்காகவும் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.