சாராயம் கடத்தலுக்கு பயன்பட்ட ஒரு பையர் படகு, 3 பைக் மதுபாட்டில் பறிமுதல்
நாகையில் சாராயம் கடத்தலுக்கு பயன்பட்ட ஒருபையர் படகு, 3 பைக் மதுபாட்டில் பறிமுதல் - 2 பேர் கைது.
Update: 2024-03-21 01:12 GMT
நாகப்பட்டினம் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் நடத்திய கள்ளச்சாராய ஒழிப்பு வேட்டையில் வெளிமாநில மது கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 2 நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 1900 பாண்டி மது பாட்டில்கள் மற்றும் 3 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்,உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகூார் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பட்டினச்சேரி இரயில்வே சுரங்கபாதை அருகில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட வாஞ்சூர் பழனிவேல் மகன்அஜித்குமார் (27) கதிரவன் மகன்கார்த்தி (26)ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 90 ML அளவுள்ள 1900 பாண்டி மது பாட்டில்கள். மற்றும் 3 இரு சக்கர வாகணங்கள் மற்றும் 1 பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தெரிவித்துள்ளார்கள்.