தக்கலையில் வேன் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை

வேன் மோதி பெண் பலியான வழக்கில் குற்றவாளிக்கு நீதிபதி ஓராண்டு சிறை தண்டனையும் ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்புவழங்கினார்.

Update: 2024-02-08 07:37 GMT

வேன் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை

விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் எழில்ராஜா (35). இவர் 2011 ஆம் ஆண்டு குமரி மாவட்டம் தக்கலை அடுத்த மருந்து கோட்டையில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கி இருந்து கல்லூரியில் எம்எஸ்சி படித்து வந்தார். அப்போது அவர் பெரியப்பா மகனின் திருமணத்திற்கு விழுப்புரத்திலிருந்து அவர் தாயார் திலகவதி (58) மருந்து கோட்டைக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 9-11- 2011 அன்று மாலையில் எழில்ராஜா தனது மோட்டார் சைக்கிளில் தாயார் திலவதியை பின்னால் அமர்த்தி கொண்டு தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார். பத்மநாபபுரத்தை கடந்து கொல்லக்குடி முக்கு பகுதியில் வந்த போது எதிரே வந்த வேன் ஓன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் திலகவதி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த எழில் ராஜாவுக்கு திருவனந்தபுரத்தில் உள்ளது தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது  தொடர்பான புகாரின் பேரில் வேன் டிரைவர் ஒட்டலிவிளையை சேர்ந்த ரிங்கிள் 37) மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு பத்மநாபபுரம் கோர்ட்டில் கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதி பிரவீன் ஜீவா தீர்ப்பளித்தார். அதில் வேன் டிரைவர் ரிங்கிளுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூபாய் 2 ஆயிரம்  அபராதம் விதித்து தீர்ப்புவழங்கினார்.

Tags:    

Similar News