தண்ணீர் தொட்டியில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

நல்லம்பள்ளி அருகே மேட்டுக்குட்டை கிராமத்தில் வீட்டின் முன்பு விளையாடிய ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

Update: 2024-04-30 06:49 GMT

காவல்துறை விசாரணை


தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட அருகே குட்டூர் மேட்டுக் கொட்டாய்கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச் செல்வன் மனைவி கோகிலா, இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தையும், ஒரு வயதில் ஓரு பெண் குழந்தையும் இருந்தனர். கணவன், மனைவி இருவரும் தர்மபுரியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. தாத்தா, பாட்டியிடம் 2 பெண் குழந் தைகளையும் விட்டு விட்டு பெற்றோர் வேலைக்கு சென்றனர். அப்போது ஒரு வயது குழந்தை வீட்டுக்கு முன்பு விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட் டியில் தவறி விழுந்து மூழ்கி இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை காவல்துறையினர் பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News