வெங்காயம் விலை உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி

ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை விற்பனையாகி வந்த நிலையில், நேற்று ரூ.4 ஆயிரமாக விலை உயர்ந்தது.

Update: 2023-12-02 04:52 GMT

வெங்காய விலை உயர்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தலைவாசலில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் பெரிய காய்கறி மார்க்கெட்டில் ஒன்றாகும். இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பிறமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகளும், விவசாயிகளும் பங்கேற்கின்றனர் வெளியிடங்களில் இருந்து கொண்டு வரும் சின்னவெங்காயம் மற்றும் காய்கறிகளை சில்லறை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் கருமந்துறை, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளது இதனால், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் விலை 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சின்னவெங்காயம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை விற்பனையாகி வந்த நிலையில், நேற்று ரூ.4 ஆயிரமாக விலை உயர்ந்தது. சின்னவெங்காயம் வரத்து அதிகரிப்புப்பால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர் .

அங்கிருந்து வாங்கிச் செல்லும் வியாபாரிகள் சில்லறை விலையில் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.80க்கு விற்பனை செய்து வருகின்றனர். விலை ஏற்றத்தால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News