சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 ஆக சரிவு

சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 ஆக சரிவு

Update: 2023-12-28 10:22 GMT
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் சின்னவெங்காயம் கிலோ100விற்ற சின்ன வெங்காயம் கிலோ, 40 ரூபாயாக சரிந்தது சேலம் மாவட்டம், தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி கெங்கவல்லி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில், சின்ன வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன. அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயத்தை, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில், விவசாயிகள் விற்கின்றனர் இரு வாரத்துக்கு முன், தலைவாசல் சுற்றுவட்டாரங்களில் இருந்து, சின்னவெங்காயம் வரத்து, 2 டன்னாக இருந்தது. அப்போது, ஒரு கிலோ, 100 முதல், 80 ரூபாய் வரை விற்றது. தற்போது, உள்ளூர் பகுதிகளில் மட்டும், 5 முதல், 6 டன் அளவில் வரத்து உள்ளது. இதனால், ஒரு கிலோ, 40 ரூபாயாக சரிந்தது.
Tags:    

Similar News