ஆன்லைன் வரிவசூல் சிறப்பு முகாம்
வந்தவாசி பெரிய மசூதி வளாகத்தில் ஆன்லைன் வரிவசூல் சிறப்பு முகாம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குத் தகை கட்டணம் ஆகியன செலுத்துதல், காலி மனை வரிவிதிப்பு விண்ணப்பம், புதிய தொழில் வரி ஏற்படுத்துவதற்கான விண்ணப்பம், குடிநீர் குழாய் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பொது மக்கள் அதிகம் கூடும் கோயில், மசூதி, சர்ச் போன்ற இடங்களில் நகராட்சி சார்பில் முகாம் அமைத்து வரிவசூல் செய்யவும் இனிவரும் காலங்களில் பொது மக்கள் ஆன்லைனில் தங்களது வரியினங்களை செலுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதையொட்டி, முதற் கட்டமாக நேற்று பெரிய மசூதி வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடந்தது. ஆணையாளர் என்.மகேஸ் வரி தலைமை தாங்கினார். மேலாளர் ஜி.ரவி,கணக்காளர் பிச்சாண்டி, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் பர்வீன் காஜா ஷரீப் வரவேற்றார். ஆன் லைன் வரிவசூல் முகாமை நகராட்சி தலைவர் எச். ஜலால் தொடங்கி வைத் தார். பிறகு நடந்த முகா மில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உட்பட வரியினங்கள் என ₹40 ஆயிரம் வரை வசூலனது. இது போன்ற ஆன் லைன் வரிவசூல் முகாம் கள் பிரதோஷம் நாட்களில் ஈஸ்வரன் கோயில் வளாகத்திலும், அமாவாசை நாட்களில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்திலும், ஞாயிற்றுக்கிழமை சர்ச் வளாகத்திலும் நடத்தப்படும் என ஆணையாளர் என்.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.