ஏகாம்பரத்தில் 9 வாக்குகள் மட்டுமே பதிவு
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இதுவரை 9 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இதுவரை 9 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 600 நாட்களுக்கு மேலாக போராடிவரும் ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், நாகப்பட்டினம், பரந்தூர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராடிவரும் நிலையில் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை 7:00 மணி முதல் நடைபெற்று வரும் மக்களவைப் பொதுத் தேர்தலை ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர். சுமார் 1400 வாக்காளர்கள் உள்ள இந்த ஊராட்சியில் வேரும் 9 வாக்குகள் மட்டுமே தற்போது வரை பதிவாகியுள்ளது. ஏகனாபுரம் கிராம மக்கள் ஒருவர் கூட தற்போது வரை வாக்களிக்க வரவில்லை.
மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியமான கலைச்செல்வி ஏற்கனவே மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஏகனாபுரம் கிராம மக்கள் மக்களவை பொது தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்து தற்போது வரை ஏகாம்பரம் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் 9 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.