முத்திரை பெற்ற பொருட்களை மட்டுமே உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய வேண்டும்
திருவாரூரில் முத்திரை பெற்ற பொருட்களை மட்டுமே உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய வேண்டும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Update: 2024-07-05 06:33 GMT
திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஐ எஸ் ஐ தரச் சான்றி இல்லாத மின் உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோக மின் சாதனங்கள் தயாரிப்பதையும் அல்லது விற்பனை செய்வதையும் கண்டிப்பாக தவிர்க்குமாறு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தரம் குறைந்த பொருட்கள் தயாரிப்பதும் விற்பனை செய்வதும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ எச்சரித்துள்ளார்.