குமரி : இரண்டு நாட்களில் இரண்டு சுயேட்சைகள் மட்டும் வேட்பு மனுத்தாக்கல்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இரண்டு சுயட்சை வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகின்ற மக்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்களவை தேர்தல் வேட்பு மனு நேற்று முன்தினம் தொடங்கியது. இதுவரை நடந்த இரண்டு நாட்கள் நடந்த மனு தாக்கலில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளனர்.
22 பேர் வேட்பு மனு படிவங்களை பெற்று சென்று உள்ளனர். அதே நேரம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக அரசியல் கட்சியினர் படிவங்களை மட்டும் பெற்று செல்கின்றனர். இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இந்த வேட்பு மனு தாக்கல் 27ஆம் தேதி புதன்கிழமை வரை நடைபெறுகிறது.