எஸ் பி அலுவலகத்தில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

கன்னியாகுமரி எஸ் பி அலுவலகத்தில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.;

Update: 2024-03-18 10:05 GMT
மாவட்ட எஸ்பி அலுவலகம்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தவிர எஸ் பி அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் செயல்பட்டு வரும் இந்த கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 எஸ் ஐ க்கள், போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் இவர்கள் கண்காணித்து வருகிறார்கள். மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் தேர்தல் தொடர்பான முன் வழக்குகள் நிலை, இதில் தொடர்புடையவர்களை தற்போதைய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

மேலும் இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து சமூக வலைதள பதிவுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே தனிப்பட்ட நபர்கள் தொடர்பாக விமர்சனங்கள் மதம், சாதி ரீதியிலான விமர்சனப் பதிவுகள் இருந்தால் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை அலுவலக செய்தி குறிப்பில்,

2024 பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னிட்டு தேர்தல் சம்பந்தப்பட்ட தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்பட்டால் அது தொடர்பாக புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கி வரும் தேர்தல் காவல் கட்டுப்பாட்டு அறை மொபைல் எண் 7010363173 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News