தேவிபட்டணத்தில் நியாயவிலைக் கடை திறப்பு

தேவிபட்டணத்தில் நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.;

Update: 2024-03-10 13:38 GMT
தேவிபட்டணத்தில் நியாயவிலைக் கடை புதிய கட்டிடம் திறப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தேவிபட்டணம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9. 13 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இக்கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம் மாள், ஊராட்சி மன்ற துணை தலைவர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலர் பொன் செந்தில் குமார் வரவேற்றார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் வார்டு உறுப்பினர்கள் குருசாமி, கிரேஸ், ஒன்றிய கவுன் சிலர் முனியராஜ், நீராத்தி லிங்கம், கிளைச் செயலாளர் முருகன், மணிகண்டன் மற்றும் தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News