திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.;
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 108 வைணவ தளங்களில் ஒன்றானதும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கும், திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் பெருமாளுக்கு மலர்களால் ஜோடனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாரதனை கட்டப்பட்டது. இதனையடுத்து சொர்க்கவாசல் வழியாக சரியாக ஐந்து மணி 30 நிமிடங்களுக்கு பல்லக்கிதல் கொண்டுவரப்பட்ட பெருமாள் முக்கிய வீதியில் வழியில் சென்று ஆலயத்தின் முகப்பு நுழைவாயில் வழியே உள்ளே சென்றார். இதனையடுத்து அங்கு அவருக்கு தீபாரதனைகள் காட்டப்பட்டது. வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி ,கந்தர்வகோட்டை, திருமயம், விராலிமலை, பொன்னமராவதி, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து பெருமானை தரிசனம் செய்தனர்.