அணைகளில் இருந்து மார்ச் 20 வரை பாசன நீர் திறப்பு

பேச்சிப்பாறை,பெருஞ்சாணி அணைகளில் இருந்து மார்ச் 20ம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-03-01 03:24 GMT

பைல்  படம் 

குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக ஜூன் மாதம் 6ம் தேதி திறக்கப்படும் .அணைகள், கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ சாகுபடி முடிவடைந்து, பிப்ரவரி மாதம் 28ம் தேதி மூடப்படும். தொடர்ந்து மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திரு விழாவிற்காக மார்ச் மாதம் தற்காலிகமாக திறக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில், கடந்தாண்டு பத்மநாபபுரம் புத்தனாறு சானல் உடைப்பு காரணமாக ஜக்கியான்குளம் புரவில் 600 ஏக்கர் பரப்பளவில்,கன்னிப்பூ சாகுபடி நடைபெறவில்லை.

அணைகளில் இருந்து கூடுதல் நாள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து தோவாளை மற்றும் அனந்தனார் கால் வாய் கடைமடை பகுதி நெற்பயிர்களை காப்பாற்றும் விதமாகவும் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிகொடை விழாவிற்கு பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் வழியாக தண்ணீர் வழங்குவதற்கும் சேர்த்து மார்ச் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினசரி 400 கன அடியும் கூடுதல் தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் 5 நாட்களுக்கு 200 கன அடி வீதம் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News