கெங்கவல்லியில் பாஜ அலுவலகம் திறப்பு

கெங்கவல்லியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது.

Update: 2024-03-11 17:19 GMT

கெங்கவல்லி

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெங்கவல்லியில் நேற்று பாஜ தேர்தல் அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. கன்னக்குறிச்சி நாடா ளுமன்ற தொகுதி பாஜ பொறுப்பாளரான மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தலைமை வகித்து,கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அந்த அலுவலகத்தில் கோரிக்கை பெட்டி வைக்கப்படும். அதில், தொகுதிக்கு உட்பட்ட கெங்கவல்லி மற்றும்தெடாவூர்,வீரகலூர், செந்தாரம்பட்டி, தம்மம்பட்டி பகுதி மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போடலாம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்டதலைவர் சண்முகநாதன் மாநில செயற்குழு உறுப்பினர் வக்கில் மணிகண்டன். ஒன்றிய பொறுப்பாளர் ஜோதிமணி ஒன்றிய தலை வர நித்தியானந்தம், சின்ன சாமி பாண்டு. அங்கமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News