கலெக்டர் அலுவலக வளாகத்தில் தண்ணீர் தொட்டி திறப்பு!

புதுகோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தண்ணீர் தொட்டி திறக்கப்பட்டது.

Update: 2024-04-30 07:07 GMT
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த வளாகத்தில் ஏராளமான மயில்கள், குரங்குகள் வசித்து வருகின்றன. வளாகத்துக்குள் ஆங்காங்கே குட்டைகள் இருந்தாலும் கோடைக்காலம் காரணமாக அவை வறண்டு விட்டதால் உயிரினங்கள் தண்ணீர் மற்றும் உணவு தேடி கலெக்டர் அலுவலகம், வெளிப்புற பகுதிகளுக்கு செல்கின்றன. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News