ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி.

ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு

Update: 2023-11-24 12:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பொள்ளாச்சி: ஆனைமலை வட்டத்திற்குட்பட்ட ஆழியார் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இந்நிலையில் ஆனைமலை வட்டம் ஆழியாறு அணையிலிருந்து எலவக்கரை குளத்தை நிரப்பவும் அதன் ஆயகட்டு பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றுவதற்காகவும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.மேலும் பாலாற்றில் தண்ணீர் கொண்டு செல்வதால் பாலாற்றின் இருபுறமும் உள்ள ஜல்லிப்பட்டி,துறையூர், கம்பால பட்டி மற்றும் கரியாஞ் செட்டிபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து பொது மக்களின் குடிநீர் தேவைகளும் மறைமுகமாக பூர்த்தி செய்வதற்காகவும் ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை உள்ள 11 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 61 கன அடி வீதம் மொத்தம் 58 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டது.இதன் அடிப்படையில் இன்று முதல் ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News