10 நாள் குழந்தைக்கு ஆப்ரேஷன்; ஈரோடு டாக்டர்கள் சாதனை

ஈரோட்டில் பிறந்து 10 நாளான 900 கிராம் குழந்தைக்கு, உணவு குழாய் அடைப்பை ஆப்ரேஷன் செய்து நீக்கினர் டாக்டர்கள்.;

Update: 2023-12-15 10:59 GMT

ஈரோட்டில் பிறந்து 10 நாளான 900 கிராம் குழந்தைக்கு, உணவு குழாய் அடைப்பை ஆப்ரேஷன் செய்து நீக்கினர் டாக்டர்கள்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈரோடு மாவட்டம் ஜம்பையில் தம்பி-பஞ்சமி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.தம்பி விசைத்தறி தொழில் செய்து வருகின்றனர்.ஐம்பதிற்கும் மேல் வயதான தம்பதியினர் தங்களுக்கு குழந்தை இல்லை என்பதை போக்கும் வகையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஈரோட்டில் உள்ள பச்சிளம் குழந்தைக்கான GRB மருத்துவமனையில் இருபத்தி ஏழே (27) வாரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உணவு குழாயில் அடைப்பு இருப்பது சில மணி நேரத்திலேயே கண்டறியப்பட்டது.பத்து நாட்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களால் முடிவெடுக்கப்பட்டது.

அப்படியிருக்க குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை கிளவுட் பண்ட்(CLOUD FUND) மூலம் திரட்டிய மருத்துவர் பூபதி,அதற்கான சிகிச்சையையும் ஐந்தரை மணி நேரத்தில் மருத்தவர்கள் குழுவினர் செய்துள்ளனர்‌. தொடர்ந்து ஒரு வாரம் தீவிர கண்காணிப்பில் இருந்த குழந்தைக்கு தேவையான உணவுகள் டிரிப் மூலம் வழங்கப்பட்டது.இரண்டு மாதத்திற்கு பிறகு தற்போது இரு குழந்தைகளும் இரண்டு கிலோவிற்கும் மேலே எடையுடன் ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய மருத்துவர் பூபதி,பிறந்த குழந்தைக்கு உணவு குழாய் உடைப்பு அறுவை சிகிச்சை என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தபோது குறைபிரசவத்தில் பிறந்துள்ளது என்பது மிகவும் சவாலாக இருந்தது என்றார்.குறிப்பாக உறுப்புகள் சிறியதாக இருக்கும்,உடலின் வெப்பநிலை மாற்றம் இருக்கும்,ரத்த போக்கு அதிகரிக்கும்,மயக்கமருந்து வழங்கியது ஆகிய நேரங்களில் மிகவும் கவனத்துடன் இருந்ததாக தெரிவித்தார்.இதுபோன்ற சிக்கலான பிரச்சினைக்கும் வளர்ந்து வரும் ஈரோடு போன்ற நகரங்களிலும் சிகிச்சை பெறலாம் என்பது தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News